சயின்ஸ் டெக் பல்ஸ்
இந்திய அறிவியல்

மூன்று உள்நாட்டு நுண் மற்றும் சிறிய கேஸ் டர்பைன் என்ஜின்களை வெளியிட்ட CSIR-NAL

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய வான்வெளி ஆய்வகங்கள் (CSIR-NAL), டெல்லியில் மூன்று உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கேஸ் டர்பைன் என்ஜின்களை வெளியிட்டது. ட்ரோன்கள், ட்ரோன் தடுப்பான்கள், சிறிய ஏவுகணை அமைப்புகளுக்காக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் - தேசிய வான்வெளி ஆய்வகங்கள் (CSIR-NAL), ஆகஸ்ட் 25 அன்று புது தில்லியில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மூன்று நுண் மற்றும் சிறிய கேஸ் டர்பைன் என்ஜின்களை வெளியிட்டது. NJ-05 (5 கிலோ உந்துவிசை), NJ-50 (50 கிலோ உந்துவிசை), NJ-100 (100 கிலோ உந்துவிசை) ஆகியவை இந்த மூன்று என்ஜின்கள்.

உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்நுட்பங்களின் தேவைகளை நிறைவேற்ற இந்த என்ஜின்கள் உருவாக்கப்பட்டதாக இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்தது. தந்திரோபாய ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs), ட்ரோன் தடுப்பான்கள், சிறிய ஏவுகணை அமைப்புகள் போன்ற பயன்பாடுகளுக்காக இந்த சிறிய உந்துவிசை அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற சிறப்புவாய்ந்த, முக்கியமான துணை அமைப்புகளை உள்நாட்டிலேயே உருவாக்கியிருப்பது ஒரு முக்கிய மைல்கல் எனக் கருதுவதாக CSIR தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி தெரிவித்தார். வான்வெளிப் பொறியியலில் ஆத்மநிர்பர் பாரத் (தன்னிறைவு பெற்ற இந்தியா) இலக்குகளை இது முன்னெடுக்கிறது என்று அவர் கூறினார். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் செயலராகவும் அவர் உள்ளார். நாட்டின் வளர்ந்துவரும் ட்ரோன் சூழல்தொகுதிக்கான பல்நிலை ஒருங்கிணைப்பாளராக CSIR-NAL-இன் வளர்ந்துவரும் பங்கை, அந்த ஆய்வகத்தின் இயக்குநர் டாக்டர் அபய் ஏ. பஷில்கர் சுட்டிக்காட்டினார். வளர்ந்துவரும் வான்வெளி தொடக்க நிறுவனச் சூழல்தொகுதி உள்பட இந்திய தொழில்துறை, இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் தேவைகளை நிறைவேற்ற இந்த என்ஜின்களை பெருமளவில் தயாரிக்கும் திறன் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சொல் விளக்கம்

#CSIR-NAL#gas turbine engine#drones#Atmanirbhar Bharat
இச்செய்திக்கு மதிப்பிடுங்கள்

தொடர்புடைய செய்திகள்