உள்நாட்டு வான்வழி கொள்கலன் சோதனையை முடித்த DRDO, இந்திய கடற்படை
150 கிலோ சரக்கை, ஆபத்தில் உள்ள கடற்படைக் கப்பல்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட உள்நாட்டு ADC-150 கொள்கலனின் நான்கு விமானச் சோதனைகளை DRDO, இந்திய கடற்படை வெற்றிகரமாக முடித்துள்ளன.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), இந்திய கடற்படையுடன் இணைந்து ஒரு பறப்புச் சோதனைத் தொடரை நடத்தியது. கோவா கடற்கரையில் P8I விமானத்திலிருந்து உள்நாட்டு வான்வழி கொள்கலனான ADC-150-ஐ கீழே இறக்கும் நான்கு சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தன. வெவ்வேறு தீவிர வெளியீட்டு நிலைமைகளின் கீழ், பிப்ரவரி 21 முதல் மார்ச் 1, 2026 வரை இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
150 கிலோகிராம் சரக்கை கொண்டு செல்லும் வகையில் ADC-150 வடிவமைக்கப்பட்டுள்ளது. கடலில் தொலைவில் நிற்கும் ஆபத்தில் உள்ள கடற்படைக் கப்பல்களுக்கு, முக்கிய பொருட்கள், கருவிகள், மருத்துவ உதவியை விரைவாக அனுப்பும் திறனை இந்திய கடற்படைக்கு இது வழங்கும்.
இந்திய கடற்படையின் தேவைகளுக்கேற்ப, குறுகிய காலத்தில் P8I விமானத்திற்கான ADC-150 அமைப்பு உருவாக்கப்பட்டு தகுதி பெற்றது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. அனைத்து மேம்பாட்டு பறப்புச் சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்துவிட்ட நிலையில், இந்த அமைப்பு விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடந்தது
- மைனஸ் 15°C இல் லடாக்கில் 22,000 அடியில் இருந்து DRDO-வின் தேசிய பாராசூட் சோதனை
- பாதுகாப்பு பயன்பாட்டுக்காக மூன்று சொந்த நுண் எரிவாயு டர்பைன் இன்ஜின்களை வெளியிட்ட CSIR
- உள்நாட்டு வான்வழி கொள்கலன் சோதனையை முடித்த DRDO, இந்திய கடற்படை
